திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை பேரண்டூர் ஊராட்சியில், ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வருபவர், பாண்டுரங்கன் (50). இவரும், இவரது மனைவியும் கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் கிராமத்தில் வசித்து வரும் தனது மகளின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, புதுவாயல் மேம்பாலம் அருகே சாலையைக் கடக்க முயன்றனர்.
அப்போது பின்புறம் அதிவேகமாக சென்ற ஈச்சர் லாரி மோதி, பாண்டுரங்கன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.