சென்னை: நிவர் புயலின் தாக்கத்தால் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ஏரியிலிருந்து நேற்று ஆயிரம் கன அடியில் தொடங்கி, இன்று காலை 9 ஆயிரம் கனஅடி வரை நீர் திறந்து விடப்பட்டது. நேற்று இரவு முதல் மழை பெய்யாத காரணத்தால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது. இதனால், ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து மழை இல்லாததாலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து சற்று குறைந்து இருப்பதாலும் ஒரு மதகில் இருந்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
நிவர் புயல் கரையை கடந்த பிறகு மழை பெய்யும் என்ற காரணத்தாலும், இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். மேலும் ஸ்ரீபெரும்பதூர், பிள்ளைபாக்கம் ஆகிய ஏரிகளிலிருந்து உபரி நீர் அதிக அளவில் வரும் என்ற காரணத்தால், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடிக்கு மேல் உயராமல், அதற்கு கீழ் கொண்டு வைத்து பராமரிக்க பொதுப்பணித் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தொடாத வகையில் அதற்கேற்ப ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம்: நோயாளிகள் கடும் அவதி