திருவள்ளூர்: தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனின் தேவை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆக்ஸிஜன் வரவழைக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.
ஐந்து லாரிகள் திரவ ஆக்ஸிஜன் எடுத்துவர கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்கு விரைவு ரயில் அனுப்பப்பட்டன. இந்த நிலையில், இன்று(மே.15) ஒடிசாவில் இருந்து ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட இரண்டு லாரிகள், திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தன.