திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் 23ஆவது மாவட்ட அளவிலான சப் ஜூனியர் - சீனியர் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இப்போட்டிகள், 11 வயது முதல் 14 வயது, 17 வயது முதல் 19 வயது வரை என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில், பொன்னேரி செங்குன்றம், பழவேற்காடு, திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
சிலம்பாட்ட போட்டி: 400 மாணவர்கள் பங்கேற்பு! - மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி
திருவள்ளூர்: மாவட்ட அளவிலான சப் ஜூனியர் - சீனியர் சிலம்பாட்ட போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்திய பின், போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இப்போட்டியின் இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக துணை செயலாளரும் சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட தலைவருமான கமாண்டோ பாஸ்கர் பரிசுகளை வழங்கினார்.
இந்த போட்டியில் தனித் திறமை மற்றும் குழுப் பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்கள் புதுக்கோட்டையில் வரும் டிசம்பர் 27,28,29 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் விளையாடும் தகுதியை பெறவுள்ளனர்.