தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

`அரசு மருத்துவமனைகளில் 10 நாள்களுக்கு புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படாது`திருவள்ளூர் ஆட்சியர்! - Corona details

திருவள்ளூர்: அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் ஏப்.26ஆம் தேதி முதல் 10 நாள்களுக்குப் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படாது என, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா
மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா

By

Published : Apr 24, 2021, 9:55 PM IST

கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, அரசு மருத்துமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோர் கூறியதாவது,`திருவள்ளுர் மாவட்டத்தில் கரோனா மருத்துவமனையாகச் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரை 10 நாள்களுக்குப் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படாது.

சுகாதாரத் துறை செயலாளரின் அறிவுறுத்தலின்படி, கரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தாலும், அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புறநோயாளிகள், அவர்கள் பகுதியின் அருகிலுள்ள மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ அல்லது கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ தங்களை பரிசோதித்து கொள்ளலாம். அவசர சிகிச்சைப் பிரிவும், பிரசவங்களும் 24 மணி நேரமும் மருத்துவமனை செயல்படும் என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details