திருவள்ளூர் மாவட்டம் சிறுனியம் கிராமத்தில் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளரும், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினருமான பலராமனின் தாயாரின் திருவுருவப்படத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். பின் அவரின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
'நீட்' குறித்து பதிலளிக்க மறுத்த ஓபிஎஸ்! - ஓபிஎஸ்
திருவள்ளூர்: நீட் தேர்வு முடிவுகள் குறித்து செய்தியார்கள் கேட்ட கேள்விக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்காமல் சென்றுள்ளார்.
!['நீட்' குறித்து பதிலளிக்க மறுத்த ஓபிஎஸ்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3484228-thumbnail-3x2-ops.jpg)
ops
இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், பாண்டியராஜன், பெஞ்சமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பொன்னேரி எம்எல்ஏ பலராமன் தாயரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து துணை முதலமைச்சர்
பின்னர் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.