திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், "திருவள்ளூர் தொகுதி மக்களவை உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து திருநின்றவூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 100 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாபிராம் அருகில் டைட்டில் பார்க் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. அப்பணிகளில் முடிவடைந்து டைட்டில் பார்க் செயல்பாட்டுக்கு வந்தால், அதன் மூலம் 30 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.