தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் சிறையில் அடைப்பு! - one person arrested Ganja-sales-in-Thiruvallur

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி கஞ்சா விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

By

Published : Oct 1, 2020, 5:35 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அண்டவாயில் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் விஜய் (22). இவர் மீது கஞ்சா வழக்குகள் பல இருந்தும், தொடர்ந்து அதை விற்பனை செய்து வந்துள்ளார்.

இன்று (அக்.1) அண்ட வாயில் ஏரிக்கரையில் விஜய் கஞ்சா விற்பனை செய்வதாக கும்மிடிப்பூண்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் ரூ.27 லட்சம் மதிப்புடைய கஞ்சா பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details