திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி எளாவூர் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கப் பின் முரணாக பதிலளித்தனர்.
அதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், இருசக்கர வானத்தை சோதனையிட்டனர். அந்த சோதனையில், ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா சிக்கியது. அதையடுத்து, கஞ்சாவை வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரை கைது செய்தனர்.