தமிழ்நாடு

tamil nadu

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழந்து விபத்து - பெண் உயிரிழப்பு

By

Published : Mar 20, 2022, 1:34 PM IST

திருவள்ளூர் அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேன் கவிழ்ந்து விபத்து
வேன் கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர்:தொடுகாடு அடுத்த நமச்சிவாய புரத்தில் உள்ள குட் லெதர் ஷூஸ் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று (மார்ச் 19) பணிபுரியும் பெண்கள் வேலை முடிந்து மாலை வேனில் வீட்டிற்கு தொழிற்சாலை வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தொழிற்சாலை வேனை ரஞ்சித் என்பவர் ஓட்டி செல்ல ராணிப்பேட்டை மாவட்டம் சாலை என்ற கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது தக்கோலம் அடுத்த பிச்சிவாக்கம் செக்போஸ்ட் அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக வேனை ஓட்டி வந்தவர் திருப்பியபோது நிலை தடுமாறி வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் வேனில் பயணம் செய்த 21 பெண்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி லட்சுமி என்ற அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். இந்த விபத்தில் 2 பேர் ஆபத்தான நிலையிலும் மற்ற ஜெயரஞ்சனி, கோமதி, மாலா உள்ளிட்ட 18 பேர் என 20 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சைப்பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பாக காணப்பட்டது. இந்த வழக்கு குறித்து சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கர்நாடகாவில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details