திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சுப்பா ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் கடந்த 50 ஆண்டுகாலமாக கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு! - சுப்பா ரெட்டிபாளையம்
திருவள்ளூர்: சுப்பா ரெட்டிபாளையம் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 50 ஆண்டு காலமாக கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
![அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3455121-277-3455121-1559530717654.jpg)
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு தேவையான கழிவறை கட்டடத்தை தங்கள் சொந்த செலவில் கட்டித்தர உள்ளதாகவும், பள்ளிக் கல்வித் துறை சார்பாக புதிய கல்விச் சோலை டிவி சேனல் தொடங்கப்படவுள்ளதால் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக்கு தேவையான தொலைக்காட்சி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினர்.
இந்த விழாவில் முன்னாள் சட்டப்பேரவைஉறுப்பினர் ரவிக்குமார், மீஞ்சூர் காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சுப்பா ரெட்டிபாளையம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு