செங்குன்றம் நாரவாரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா. 70 வயது மூதாட்டியான இவர் தனியாக வசித்துவருகிறார். இன்று காலை அவரது வீட்டின் அருகே வசிக்கும் 43 வயதான ஆரோக்கியசாமி என்பவன் கஞ்சா அடித்த போதையில் மூதாட்டியை வல்லுறவு செய்துள்ளான்.
போதையில் மூதாட்டியை பாலியல் வல்லுறவு செய்தவர் கைது - rape
திருவள்ளுர்: செங்குன்றம் அருகே போதையில் மூதாட்டியை பாலியல் வல்லுறவு செய்த நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்
கைது செய்யப்பட்ட ஆரோக்கியசாமி
பின்னர் மயங்கி கிடந்த மூதாட்டியை அவருடைய உறவினர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது பற்றி தகவலறிந்த செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆரோக்கியசாமியை தேடிவந்தனர். இந்நிலையில் இன்று மதியம் ஆரோக்கியசாமியை செங்குன்றம் ஆய்வாளர் ராஜேந்திரன் கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்.