திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்பார்வையிடும் கண்காணிப்பு அலுவலர், நகராட்சி நிர்வாக ஆணையர் முனைவர் கே. பாஸ்கரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களை சுகாதாரத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், வெளிநபர்கள் அந்த பகுதியின் உள்ளே வராத வண்ணம் முழுவதும் அடைக்கப்பட்டு காண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.