திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் தனியார் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்குதலில் தற்காத்துக்கொள்ளும் விதமாக மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கு கடைபிடிக்குமாறு மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டது.
நாடு முழுவதும் இந்த மக்கள் ஊரடங்கு கடைபிடிப்பக்கப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கீழ்ச்சேரியில் உள்ள தனியார் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு வேலை நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.
அந்தப் பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில், மப்பேடு வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தொழிற்சாலைக்குள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.