திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருபவர் அபினஷ்யக்கா (39). இவர் சில மாதங்களுக்கு முன்பு சோழவரம் கூட்டு சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டார்.
மின்கம்பியை பிடித்தபடி உயிரிழந்த வடமாநில ஊழியர் - Odisha state
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஒடிசாவை சேர்ந்த அபினஷ்யக்கா(39) என்பவர் மின்கம்பியை பிடித்தபடி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 22) இரவு சுமார் ஒரு மணிக்கு மேல் காணாமல் போனவரை சக ஊழியர்கள் தேடி வந்த நிலையில் இன்று(ஆகஸ்ட் 23) காலை அவர் பணிபுரிந்து வந்த தனியார் தொழிற்சாலையில் உள்ள மின்மாற்றியில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.