தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காப்பர் கம்பியில் காற்றாடி விட்ட வடமாநில இளைஞர் உயிரிழந்த சோகம்! - north indian man death due to current shock in thiruvallur

திருவள்ளூர்: பாலவாயலில் காப்பர் கம்பியில் காற்றாடி விட்ட வடமாநில தொழிலாளி ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

north indian man death due to current shock in kite
north indian man death due to current shock in kite

By

Published : Mar 17, 2020, 9:37 AM IST

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டு என்பவர் பாலவாயல் பகுதியில் தங்கியிருந்து தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் காப்பர் கம்பியில் காற்றாடியை கட்டி பறக்க விட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காப்பர் கம்பி மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

வடமாநில இளைஞர் உயிரிழந்த சோகம்

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சோட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க... வெடிமருந்து நிரப்பும் போது நிகழ்ந்த விபத்து - ஒருவர் படுகாயம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details