தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலுவைத்தொகை வழங்கக்கோரி அனல்மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - விடுமுறை ஊதியம்

திருவள்ளூர்: நிலுவையில் உள்ள வைப்புத்தொகை, விடுமுறை ஊதியம் உள்ளிட்டவைகளை வழங்க வலியுறுத்தி வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai thermal plant workers protest

By

Published : Aug 1, 2019, 1:59 AM IST

திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை அனல்மின் நிலையம், எண்ணூர் அனல்மின் நிலையம் ஆகியவற்றில் சுமார் 1600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த ஆறு மாதமாக வைப்புத்தொகை, விடுமுறையை ஒப்படைக்கும் போது வழங்கப்படும் ஊதியம், மின்சார உற்பத்தியில் வழங்கப்படும் ஊக்கத் தொகை உள்ளிட்டவைகள் வழங்கப்படவில்லை.

இதை கண்டித்து, வடசென்னை அனல்மின் நிலைய வாயிலில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பணப்பலன்கள் வழங்கப்படாததால் தங்களது குழந்தைகளின் பள்ளி, கல்லூரி கட்டணங்களை கட்ட முடியாமலும், மகள்களின் திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பணம் தேவைப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மின் உற்பத்தி அதிகரிக்கும் போது ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் ஊக்கத்தொகை, விடுமுறையை ஒப்படைக்கும்போது வழங்கப்படும் ஊதியம் சுமார் பத்து கோடி வரை நிலுவையில் இருப்பதாகவும், அதனை உடனே வழங்கிட வேண்டும் என தெரிவித்தனர். மேற்படி அனல்மின் நிலைய நிர்வாகம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாது பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவுள்ளதாக என தொழிலாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

அனல் மின் ஊழியர்கள் பணப்பலன்களை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details