தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குண்டுமல்லி பூ சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் - thiruvallur

திருவள்ளூர்: நிலத்தடி நீர் குறைவால் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் குண்டுமல்லி பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குண்டுமல்லி பூ சாகுபடியில் ஆர்வம் காட்டி வரும் விவசாயிகள்

By

Published : May 15, 2019, 7:27 PM IST


திருவள்ளூர் மாவட்டத்தில் விடையூர், புல்லரம்பாக்கம், புதுமாவிலங்கை, மோவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது விளை நிலங்களில் வேர்க்கடலை, கரும்பு, நெல் போன்ற பயிர்களை நடவு செய்வது வழக்கம். அனால் இந்தாண்டு பருவமழை பெய்யாததால், இங்குள்ள பெரும்பாலான ஏரிகள், குளம், கிணறுகள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டது. இதனால் அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை நடவு செய்யாமல் குறைவான தண்ணீரில் விளையக்கூடிய பயிர்களையே விவசாயிகள் நடவு செய்து வருகிறனார். இதில் குண்டுமல்லி பூச்செடிகள் வளர்ப்பதற்கு குறைவான உரம், தண்ணீர், ஆட்கள் போதுமானதால் விவசாயிகள் தங்களது நிலத்தில் குண்டுமல்லி பூச்செடிகள் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குண்டுமல்லி பூ சாகுபடியில் ஆர்வம் காட்டி வரும் விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details