தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலிரவில் கருத்து வேறுபாடு: மனைவியை கொன்று கணவனும் தற்கொலை - புதிதாக திருமணம் ஆன இளம் பெண் கொலை

திருவள்ளூர்: செம்மஞ்சேரி அருகே முதலிரவின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்டார்.

Newly married couple murder
Wife beheaded by husband

By

Published : Jun 11, 2020, 3:55 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட செம்மஞ்சேரி காலனியில் வசிப்பவர் நீதி வாசன் (26). இவருக்கும் சென்னை மணலி சடயங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா (20) என்பவருக்கும் நேற்று (ஜூன் 10) திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், பெண் வீட்டார் அழைப்பு முடிந்து மாப்பிள்ளை வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே, மணப் பெண் சந்திராவுக்கும் நீதி வாசனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், சந்தியாவை கடப்பாரையால் கொடூரமாக தாக்கி கொலை செய்த நீதி வாசன், ஏரிக்கரை ஓரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கை தொடங்கும் முன்பே கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை கொலையிலும் தற்கொலையிலும் முடிந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பெரம்பூர் அருகே சாலையில் வீசப்பட்ட 5 மாத பச்சிளம் குழந்தை!

ABOUT THE AUTHOR

...view details