திருவள்ளூர்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (31). இவருக்கும், சென்னை பீர்க்கன்கரணையைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகா (30) என்பவருக்கும் கடந்த 28ஆம் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் நேற்று (அக்.31), இவர்கள் இருவரும் சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி காரில் சென்றுள்ளனர். அப்போது சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற கார் மீது மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் வண்டியை அங்கேயே விட்டுத் தப்பி ஓடிவிட்டார்.