அரக்கோணத்திலிருந்து கண்டெய்னர் லாரி இன்று காலை திருவள்ளூர் வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு சாலை வளைவில் திரும்பும்போது எதிரே ஆவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது மோதியது.
அதில் கன்டெய்னர் லாரி சாலையோரம் இருந்த இருசக்கர வாகனகடைக்குள் புகுந்தது. இதனால்அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் சுக்குநூறானது.
மேலும் இந்த விபத்தில் இருசக்கர வாகனம் ஒன்று காரின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர்,அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரியை செவ்வாப்பேட்டை காவல் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருவள்ளூர் ஆவடி சாலையில் ஒரு மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கார்-கன்டெய்னர் லாரி விபத்தில் 5 பேர் படுகாயம்