தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குடற்புழுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவிகளிடையே பேசினார். அதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு மாத்திரையையும் வழங்கினார்.
திருவள்ளூர் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் - government school
திருவள்ளூர்: தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.

school
தேசிய குடற்புழு விழிப்புணர்வு முகாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என மூன்றாயிரத்து 838 மையங்களில் 4 ஆயிரத்து 367 பணியாளர்கள் மூலம் இந்த குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.