தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

14 நாள்களில் காணாமல் போன சிறுவர்கள் மீட்பு: காவல் துறையினர் கௌரவிப்பு - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

திருவள்ளூர்: வழக்குப் பதிவு செய்த 14 நாள்களில் காணாமல்போன சிறுவர்களைப் பத்திரமாக மீட்ட காவல் துறையினரைக் கௌரவிக்கும் விதமாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

குழந்தைகள் ஆணையம்
குழந்தைகள் ஆணையம்

By

Published : Aug 1, 2020, 1:34 AM IST

திருவள்ளூரிலுள்ள ஒருங்கிணைந்த கிராமப்புற சமூக மேம்பாட்டு சங்கத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 2 சிறுவர்கள் ஜூலை மாதம் 11ஆம் தேதி தப்பியோடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவள்ளூர் நகரக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவ்விவகாரத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில் திருவள்ளூர் ஆய்வாளர் ரவிக்குமார், சோழவரம் ஆய்வாளர் நாகலிங்கம் தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, சிறுவர்கள் தேடப்பட்டுவந்தனர்.

சோழவரம் பகுதியிலிருந்த இரு சிறுவர்களையும் காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து இன்று (ஜூலை 31) காணாமல்போன சிறுவர்களை மீட்ட காவல் துறையினரைப் பாராட்டும் வகையில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து சிறுவர்களை மீட்ட தனிப்படை காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், ”ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட 15 குற்ற வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைதுசெய்த தமிழ்நாடு காவல் துறைக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சான்றிதழ் வழங்கியது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்த 14 நாள்களில் காணாமல்போன சிறுவர்களைப் பத்திரமாக மீட்டதால், அவர்களுக்கும் சான்றிதழ் கொடுத்து கௌரவிக்கப்பட்டது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details