திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த விளங்காடுபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் மல்லி மாநகர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முரளி என்பவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் தூண்டிலில் தோல் பை ஒன்று சிக்கியது. அதில் ஒன்றரை அடி உயரம் கொண்ட நடராஜர் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
சிறுங்காவூர் ஏரியில் சிக்கிய நடராஜர் ஐம்பொன் சிலை - காவல்துறை தீவிர விசாரணை - திருவள்ளூர் மாவட்ட செய்தி
திருவள்ளூர் : செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கத்தில் சிறுங்காவூர் ஏரியில் இளைஞர் மீன்பிடிக்கும் போது ஒன்றரை அடி உயரம் கொண்ட நடராஜர் ஐம்பொன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வலையில் சிக்கிய நடராஜ சிலை
இது குறித்து, செங்குன்றம் காவல்துறைக்கு முரளி தகவல் தெரிவித்தார். பின்னர் ஆய்வாளர் வசந்தன், காவல்துறையினர் மீன்பிடி வலையில் சிக்கிய நடராஜர் சிலையை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றனர். பின்னர் இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், சிலை பற்றி விசாரித்து வருகிறோம். மீட்கப்பட்ட நடராஜர் சிலையை வருவாய் துறையிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.