தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நரிக்குறவர் இன மக்கள் பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் - நரிக்குறவர் இன மக்கள் பட்டா வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை வழங்கினார்கள்

கும்மிடிப்பூண்டியில் நரிக்குறவர் இன மக்கள் பட்டா வழங்க வலியுறுத்தியும், அடிப்படை வசதிகளைச் செய்து தர கோரியும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நரிக்குறவ
நரிக்குறவர் இன மக்கள் பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

By

Published : Mar 22, 2022, 11:49 AM IST

திருவள்ளூர்மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 11வது வார்டில் சுமார் 60 வருடங்களாக 23 நரிக்குறவ இன குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டும் பட்டா தயார் செய்யப்பட்டதாககூறப்படும் நிலையில் மற்ற குடும்பங்களுக்குப் பட்டா வழங்க வலியுறுத்தியும் அடிப்படை வசதிகளைச் செய்து தர கோரியும், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர் இன மக்கள் பேரூராட்சி செயலர் யமுனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தேர்தலுக்கு முன்னதாக பலமுறை வழங்கப்பட்ட மனுக்களை ஊராட்சி செயலர் யமுனா வாங்க மறுத்ததாகவும், வாங்கிய சில மனுக்களை நரிக்குறவர் இன மக்கள் கண்முன்னே கிழித்துப் போட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் வார்டு உறுப்பினரின் ஜோதி இளஞ்செல்வன் தலைமையில் நேற்று (மார்ச்.21) 100 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைக்குழந்தைகளுடன் நரிக்குறவர் மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

நரிக்குறவர் இன மக்கள் பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம்

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர் இன மக்களுடன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி தலைவர் ஷகிலா அறிவழகன், துணைத்தலைவர் கேசவன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் இலவச பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர் இன மக்கள் கலைந்து சென்றனர்.


இதையும் படிங்க:'நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒத்துழைப்பார்' - மக்களவையில் திருமாவளவன்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details