திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட காந்திபுரத்தைச் சேர்ந்தவர், அந்தோணி. இவர் பல ஆண்டுகளாக திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராகப் பணி புரிந்து வந்தார்.
ஆட்சியர் அலுவலக வாயிலில் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்த ஓட்டுநர் - மர்மமான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் இறந்து கிடந்த ஓட்டுநர்
திருவள்ளூர்: வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த ஓட்டுநர் சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கரோனா தடுப்புப் பணியின் காரணமாக, நெடுஞ்சாலைத்துறையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புற வாயிலில் காலை வாயில் நுரை தள்ளியபடி சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த நகர காவல்துறையினர் அந்தோணியின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் ஓட்டுநர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.