திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பம் ஊராட்சி, சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவர் குடும்பத்தகராறு காரணமாக பூச்சிமருந்து குடித்துள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் கார்த்திகை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.
அங்கு தலைமை மருத்துவரான கென்னடி விரைந்து வந்து முதலுதவி செய்து அவரை தனி வார்டில் அனுமதித்தார்.
அப்போது கார்த்திக்குடன் வந்த நண்பர்கள் சிரித்துக்கொண்டே இருந்தனர். இதனால் அவர்களை அமைதியாக இருக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தினார்.