தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Aditya L1 update: 3 மாதத்தில் சூரியனில் நடக்கும் நிகழ்வு வெளியாகும் - மயில்சாமி அண்ணாதுரை கொடுத்த அப்டேட்! - ஆதித்யா எல் 1 அப்டேட் கொடுத்த மயில்சாமி அண்ணாதுரை

Mylswamy Annadurai said Aditya L1 update: அடுத்த 3 மாதங்களில் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல் வெளியாக இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 1:08 PM IST

மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்கள் சந்திப்பு

திருவள்ளூர்:அரண்வாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 23-ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சந்திராயன் 1 திட்ட இயக்குநரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

விழா மேடையில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், சந்திராயன்-3 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, சந்திராயன்-3 குறித்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை, "சந்திராயன்-1 செயற்கை கோள் நிலவில் நீர் கண்டுபிடிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளின் போது உலக நாடுகள் திரும்பி பார்த்தார்கள். சர்வதேச ஆய்வு மையம் கூட சந்திராயன்-1 செயற்கைக்கோளை நிலவிலேயே வைத்து கொண்டு, நிலவில் உள்ள கனிம பொருட்களை உபயோகமாக பூமிக்கு கொண்டு வரமுடியுமா என்கிற பல கட்ட ஆராய்ச்சிகள் செய்யப்பட்டது.

நிலவில் உள்ள கனிம பொருட்களை பூமிக்கு பத்திரமாக கொண்டுவர பல நாடுகள் முயற்சி செய்தது. ஆனால் அதில் தோல்வி தான் அடைந்தது. ஆனால் சந்திராயன் செயற்கை கோள் மூலமாக நிலவில் உள்ள கனிம பொருட்களை பூமிக்கு பத்திரமாக கொண்டுவர முடியும் என்கின்ற போது, அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக ரஷ்யா, இஸ்ரேல், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் எல்லாம் திரும்ப முயற்சி செய்கின்றனர்.

சந்திராயன்-3 மூலமாக இந்தியா அளவில் இளைஞர்கள், மாணவர்கள் பெரியவர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திராயன்-3-க்கு பிறகு வர்த்தக ரீதியாக பல புதிய நாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இன்னும் 5 - 10 வருடங்களுக்குள் நிலவில் உள்ள சில கனிம பொருட்களை கொண்டுவர இருக்கின்றோம். அதற்காக அதிகப்படியான பொறியியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே இன்றைய மாணவர்கள் அதற்காக தங்களை தாயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய சூரியனில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை கண்காணித்து, செயற்கைக் கோள்களை பாதுகாக்க சூரியனை நோக்கி செயற்கைக் கோள் அனுப்பி உள்ளதாகவும், அதில் இருந்து இன்னும் 3 மாதங்களில் சூரியனின் நடக்கக்கூடிய நிகழ்வுகள் குறித்து தகவல் வெளியாகும்" எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திடீரென பெய்த கனமழை.. சாலை எங்கிலும் ஓடிய மழை நீர்..!

ABOUT THE AUTHOR

...view details