திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான பஜார் வீதி அருகே மசூதி தெரு உள்ளது. இந்தத் தெருவில் 50க்கும் மேற்பட்ட கடைகள், குடியிருப்புகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல், சுகாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனைச் சீர்செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, நேற்று திருவள்ளூர் மசூதி தெரு அருகே 50க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்தது நகர காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான காவலர்கள் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின், காவல் துறையினர் நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இன்னும் ஓரிரு நாள்களில் சீரமைப்பதாக நகராட்சி அலுவலர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அப்போது, ஜாமியா மசூதி ஹஜ்ரத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இங்கு பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.