தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கிய இசை ஆசிரியர் - திருவள்ளூர் இசை ஆசிரியர் நிவாரண நிதி

கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 300 பேருக்கு மாவட்ட வழக்கறிஞர் சங்க இணை செயலாளர் இசை ஆசிரியர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

Music Teacher  relief aid  victims of corona damage  thiruvallur news  thiruvallur latest news  thiruvallur Music Teacher provided relief aid to 300 families  fund  corona fund  திருவள்ளூர் செய்திகள்  திருவள்ளூர் இசை ஆசிரியர் நிவாரண நிதி  கரோனாவால் உயிந்தவர்களில் குடும்பத்தினருக்கு நிதி
கரோனாவால் உயிந்தவர்களில் குடும்பத்திருக்கு...நிவாரண நிதி வழங்கிய இசை ஆசிரியர்

By

Published : Jun 14, 2021, 1:27 AM IST

திருவள்ளூர்: நாடு முழுவதிலும் கரோனா இரண்டாவது அலையால், பலர் தங்களது குடும்பத்தில் ஒருவரை இழந்துள்ளனர். அதனால் கரோனா பாதிப்புகளை குறைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியது.

இதனால் சிலர் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையை போக்கும் பொருட்டு சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர் ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க இணைச் செயலாளர் இசை ஆசிரியர் ஏ ஜி சுரேஷ், ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து அம்மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 300 பேருக்கு நிவாரண பொருள்கள் வழங்கி வருகின்றனர்.

நிவாரணப் பொருள்களாக 10 கிலோ அரிசி, ரூ.800 மதிப்பிலான மளிகை, ரூ.500 மதிப்பிலான காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் சந்துரு மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி பற்றாக்குறைக்கு அதிமுக அரசே காரணம்- மாணிக்கம் தாகூர்

ABOUT THE AUTHOR

...view details