திருவள்ளூர் மாவட்டம், அனுப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரத்தினத்தின் மகன் கவியமுதன். இந்நிலையில், இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து நிறுத்திய அடையாளம் தெரியாத நபர்கள், கவியமுதனை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கவியமுதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
முன்விரோதத்தில் இளைஞர் வெட்டி படுகொலை; திருவள்ளூரில் பரபரப்பு! - muder
திருவள்ளூர்: கொலை வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த இளைஞரை, அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம், திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர், கவியமுதனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த புத்தாண்டு தினத்தின்போது ஏற்பட்ட மோதலில் விஜய், சந்துரு ஆகியோர் மீது அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், விஜய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்துரு தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். இந்த கொலை வழக்கில் சின்னக்காலனி பகுதியை சேர்ந்த பழனி, கவியமுதன், தீபக், சரண்ராஜ், அருண், உதயகுமார் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வல்லரசு, தினேஷ், இனியன், விமல், அரவிந்த், விஷ்ணு உள்ளிட்ட 6 பேருக்கும், இந்த கொலையில் தொடர்பு இருந்ததது தெரிய வந்துள்ளது. விஜய் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து, சில நாட்களுக்கு முன்புதான் கவியமுதன் வெளிவந்துள்ளார். இதனை நோட்டமிட்ட ஒரு தரப்பினர், கவியமுதனை பின்தொடர்ந்து சென்று கொலை செய்து பழி தீர்த்துள்ளது என்று தெரியவந்துள்ளது.