தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சினிமா பாணியில் நடந்த கொடூர கொலை: கொலையாளிகள் 4 பேர் சரண்..! - கொலையாளிகள் 4 பேர் சரண்

திருவள்ளூர்: உணவகத்தில் வைத்து இளைஞர் ஒருவரை சரமாரியாக ஓட ஓட வெட்டி கொன்ற சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

கொலையாளிகள் 4 பேர் சரண்

By

Published : Aug 18, 2019, 11:55 PM IST

திருத்தணி - அரக்கோணம் சாலையில் இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்ட முயன்றனர். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிய அந்த இளைஞர் நீதிமன்றம் அருகே இருந்த தனியார் உணவகத்திற்குள் நுழைந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த அந்த நான்கு பேரும் தனியார் உணவகத்திற்குள் வைத்து வாடிக்கையாளர்கள் முன்பு இளைஞரை சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

திருத்தணி கொடூர கொலை: கொலையாளிகள் 4 பேர் சரண்

இக்கொடூர கொலை தொடர்பான வழக்கில், நான்கு பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். மேலும், வாகன ஓட்டுநரைக் கைது செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நான்கு பேரும் கடந்த ஜூன் மாதம், வேறொரு கொலை வழக்கில் பிணையில் வெளிவந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details