திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சிப் பகுதியில் உள்ள திருமுல்லைவாயிலில் கார்த்திக் என்பவர் ஆறு வீடுகள் கொண்ட மூன்று அடுக்குமாடிக் கட்டடத்தை கட்டி வந்தார்.
ஆவடியில் அனுமதியின்றி கட்டப்பட்ட குடியிருப்புக்கு சீல் - நகராட்சி அலுவலர்கள் அதிரடி - பூட்டி
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சிஎம்டிஏ அனுமதியின்றி சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பை நகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.
இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ள கட்டடத்தை நகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அனுமதியின்றி இக்கட்டடம் கட்டப்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, கட்டட ஆய்வாளர் தினகரன் தெரிவித்தார்.
மேலும், ஆவடி நகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு முதல்கட்டமாக நோட்டீஸ் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். இந்தக் கட்டடங்களுக்கும் விரைவில் சீல் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் ஆவடி பகுதி குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர்.