தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆணவ படுகொலைகளை தடுக்க அரசு முனைப்பு காட்டவில்லை - தொல்.திருமாவளவன் - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவ படுகொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டவில்லை என எம்பி தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

எம்பி தொல்.திருமாவளவன்
எம்பி தொல்.திருமாவளவன்

By

Published : Oct 11, 2021, 8:15 PM IST

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த ஆரணி காரணை கிராமத்தைச் சேர்ந்த கௌதமன் என்பவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த அம்முலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி தனது தாத்தாவை பார்க்க சென்ற இளைஞர் கௌதமன் காணாமல் போனார். பின்னர் இரண்டு தினங்கள் கழித்து செப்டம்பர் 17ஆம் தேதி இரவு கௌதமன் இறந்துவிட்டதாக பேனர் போட்டு அவரது உடலை எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று(அக்.11) ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்பி தொல்.திருமாவளவன் தலைமைத் தாங்கினார்.

எம்பி தொல்.திருமாவளவன்

ஆணவக்கொலைகள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் ஆவணப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரபாகரன் என்ற இளைஞர் ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முற்பட்டதால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் நரசமங்கலம் காலனியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணவ படுகொலைகளை தடுக்க அரசு முனைப்பு காட்டவில்லை - தொல்.திருமாவளவன்

உரிய பாடம் புகட்டுவோம்

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவம் நடப்பதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அஜய் மித்ரா இந்த கூட்டத்தை கலைப்போம் அவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவோம் என பேசி, அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளதால் அவரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாளை 1250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்- மா. சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details