திருவள்ளூர் மாவட்டம் புழல் கன்னடபாளையம் ஜீவா தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ரஞ்சித்குமார் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பாக்கியலட்சுமி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மித்ரன் என்று ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது.
கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாலை வேலை முடித்து பாக்கியலட்சுமியின் மாமியார் சாந்தி வீட்டிற்கு வந்துள்ளார். அவர் நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது குழந்தையுடன் தாய் பாக்கியலட்சுமி தூக்கிட்ட நிலையில் சடலமாக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.