திருவள்ளூர்:எல்லாபுரம் ஒன்றியம், புன்னப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் விஜயகுமார் என்பவரது மனைவி நிரோஷா (35) இவர்களுக்கு தர்ஷினி, வினிதா என்ற 2 மகள்கள் உள்ளனர். தனது கணவர் விஜயகுமார் இறந்துவிட்ட நிலையில், திருத்தணி பகுதியிலிருந்து பூக்களைக் கொண்டு சென்று ஆவடி பூ மார்க்கெட்டில் பூக்களை விற்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், மூத்தமகள் தர்ஷினி நிரோஷாவின் தாய் ஊரான கொப்பூரில் படித்து வரும் நிலையில், இரண்டாவது மகள் வினிதா விஜயகுமாரின் தாய் வீட்டிலிருந்து, புண்ணபாக்கம் பகுதியில் உள்ள தாய் நிரோஷா வீட்டிற்கு நேற்று(நவ.15) திரும்பியுள்ளார்.
இதனையடுத்து நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் நிரோஷா தனது இளைய மகள் வினிதாவுடன் இருசக்கர வாகனத்தில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் பகுதியிலுள்ள கொசஸ்தலை ஆறு கீழ் எல்லைப்பகுதியில் தங்கள் காலணிகளை இருசக்கர வாகனத்தின் அருகில் விட்டு விட்டுக் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.