திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவ - மாணவிகளுக்கு சென்னை நுங்கம்பாக்கம் எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி மாணவிகள் சிறப்பு பயிற்சி அளித்தனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் குறித்து செயல்பாடுகள் தொடர்பாகவும் பள்ளிப் பாடங்களை எளிதாக கற்றுக் கொள்ளும் வழிமுறைகளையும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய விளையாட்டு முறைகளையும் பயிற்சி அளித்தனர்.