தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயி வீட்டில் 15 சவரன் தங்க நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு! - நகை திருட்டு

விவசாயி வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் தங்க நகை, ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

விவசாயி வீட்டில் 15 சவரன் தங்க நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
விவசாயி வீட்டில் 15 சவரன் தங்க நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு

By

Published : Aug 29, 2021, 3:13 PM IST

திருவள்ளூர்: பட்டரைபெரும்புதூர் வரதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வீரன் என்பவரது தந்தை கோபால். விவசாயியான கோபால் தினந்தோறும் காலை ஆறு மணிக்கு விவசாய பணிகளுக்காக சென்று மதியம் ஒரு மணிக்கு வீடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதேபோல் இன்று (ஆக.29) காலை ஆறு மணிக்கு விவசாயப் பணிகளுக்காக வயல்வெளிக்குச் சென்ற கோபால் சுமார் ஒரு மணியளவில் வீடு திரும்பினார்.

திருட்டு குறித்து விசாரணை

அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அவரது வீட்டு பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகை, ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர், வீட்டில் சோதனை நடத்தினர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வடிவேல் பாணியில் புது ரூட்டெடுத்து திருடிய கேரள பட்டதாரி!

ABOUT THE AUTHOR

...view details