திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஏர்கலப்பை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.எஸ். அழகிரி, "விவசாயிகளின் கோரிக்கைகளை 12 மணி நேரத்தில் தீர்க்கக்கூடிய வகையில் இருந்தும் அதனைச் செய்யாமல் ஒளவையாரைப் பற்றி பேசியது தேவை இல்லாதது.
இது எதிரும் புதிருமான பேச்சு. சென்னை வந்த மோடி, சாலை வழியாகச் செல்ல முடியாமல் வான்வழியே சென்றிருக்கிறார். காணொலி காட்சி மூலம் திறப்பதற்கு டெல்லியில் இருந்தே திறந்திருக்கலாமே.
தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து பிரதமர் மோடி அஞ்சுகிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எடுத்த நடவடிக்கைகளைத் தற்போதைய மோடி அரசு எடுக்கவில்லை.
டெல்லியில் போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு மக்களவையில் மத்திய அரசே இரங்கல் தெரிவித்து இருக்க வேண்டும், ராகுல் காந்தி அதனைச் செய்ததில் தவறில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:’வேலைவாய்ப்பு, தொழில் முதலீடுகள் இல்லாமல் தமிழ்நாடு எவ்வாறு வெற்றி நடைபோடும்’: கனிமொழி கேள்வி