மக்களவைத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்று, மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி, இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள ரயில் நிலைய அலுவலகங்களில் பிரதமர் மோடியின் படத்தை வைக்கக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கோரிக்கை மனு இன்று அளிக்கப்பட்டது.
ரயில் நிலையத்தில் மோடி படம்; பொன்னேரியில் இந்துமக்கள் கட்சி மனு! - modi
திருவள்ளூர்: பொன்னேரி ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தினை வைக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ரயில் நிலைய அலுவலர்களிடம் மனு அளித்தனர்.
மோடி படம் வைக்க கோரிக்கை
இதில் ஒரு பகுதியாக, பொன்னேரி ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வைக்கக்கோரி இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் சோமு ராஜசேகரன் தலைமையில் அக்கட்சியினர், ரயில் நிலைய மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், மோடியின் படத்தையும் ரயில் நிலைய அலுவலர்களிடம் அளித்தனர்.