திருவள்ளூர் :மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக 43 இடங்களிலும், கூட்டுறவுத் துறை மூலமாக 5 இடங்களிலும் சேர்த்து மொத்தமாக 48 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் இயங்கி வருகின்றன.
இதில் காரீப் கொள்முதல் பருவம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் மையங்கள் மூலம் ஒரு லட்சத்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் அரசின் புதிய நெல் கொள்முதல் விலையில் இதுநாள் வரை 5 ஆயிரத்து 588 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.