தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏக்கள்! - Gummidipoondi Nivar storm impacts

திருவள்ளுர்: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் மழைநீர் தேங்கிய இடங்களை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.எஸ்.விஜயகுமார், வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி  கும்மிடிப்பூண்டி நிவர் புயல் பாதிப்புகள்  எம்.எல்.ஏ கே.எஸ்.விஜயகுமார்  எம்.எல்.ஏ வி.ஜி ராஜேந்திரன்  கும்மிடிப்பூண்டியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏக்கள்  MLAs inspecting rainwater harvesting areas in Gummidipoondi  MLA KS Vijayakumar  MLA VG Rajendran  Gummidipoondi Nivar storm impacts  Gummidipoondi Municipality
MLAs inspecting rainwater harvesting areas in Gummidipoondi

By

Published : Nov 26, 2020, 9:43 PM IST

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கோட்டக்கரை அண்ணாநகர், ஜிஎன்டி சாலை கிழக்கு, ரெட்டம் பேடு சாலையில் மழைநீர் செல்வதற்கு வழியின்றி தேங்கிய நிலையில் காணப்பட்டது.

அதனை தனியாருக்கு சொந்தமான காலி இடங்களின் வழியாக ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் அமைத்து வெளியேற்றப்பட்டது. இதனால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறிய இட உரிமையாளர்கள், பேரூராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், கொட்டும் மழை என்று பாராமல் இட உரிமையாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மழை நீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது.

இதே போல், திருவள்ளூர் நகரம் 6, 11, 14, 18, 22, 26ஆவது வார்டுகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் மழைநீர் வெளியேற்ற முடியாமல் இருந்தது. இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், நகராட்சி அலுவலர்களுடன் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வெளியேற விரைந்து நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையும் படிங்க:நிவர் புயல்: குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details