தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர் குடியிருப்புகளில் எம்எல்ஏ ஆய்வு - திருவள்ளூர் அண்மைச் செய்திகள்

திருத்தணி அருகே உள்ள காந்தி கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் வெள்ள நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட இருளர் இன குடியிருப்புகளை, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

திருத்தணி அருகே இருளர் குடியிருப்புகளில் எம்எல்ஏ ஆய்வு!
திருத்தணி அருகே இருளர் குடியிருப்புகளில் எம்எல்ஏ ஆய்வு!

By

Published : Nov 13, 2021, 7:26 PM IST

திருவள்ளூர்: திருத்தணி அருகே உள்ள காந்தி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் இன்று (நவம்பர் 13) திடீரென கொசஸ்தலை ஆற்றின் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், படகு மூலம் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த முட்டி அளவு நீரில் நடந்துசென்று பாதிக்கப்பட்ட வீடுகளை அவர் ஆய்வுசெய்தார்.

பின்னர் அங்கு தேங்கியிருந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வதுடன், நிவாரண உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜேந்திரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றும் உபரி நீரின் அளவு குறைப்பு

ABOUT THE AUTHOR

...view details