திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல்கள் காரணமாக ஏராளமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இங்கு 15க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
நில வேம்பு குடிநீர், ஓ.ஆர்.எஸ் கஞ்சி ஆகியவை மருத்துவமனையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், டெங்கு காய்ச்சல் தடுப்புப் பிரிவில் உள்நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேலும் அவர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்புவது குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சேகர், மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்து விளக்கமளித்தனர்.
இதையும் படிங்க: நாகையில் டெங்கு விழிப்புணர்வு முகாம்