குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம் வீடு கட்டிக்கொடுக்கப்படுகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் சோம்பட்டு கிராமத்தில், குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் மூலம் குடிசை வீடுகளில் வசிக்கும் 50 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு இன்று, காங்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு தலா 2லட்சத்து பத்தாயிரம் ரூபாய் நிதி உதவியை பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் மற்றும் குடிசைமாற்று வாரிய அலுவலர்கள் வழங்கினார்.