திருவள்ளூர்: அத்திப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீட்டுமனைப்பட்டா கேட்டு அரசுக்கு மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 17) நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர் 28 குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கினார்.