திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னம்பேடு ஊராட்சியில் கீழ் மேனி கிராமத்தில் 7 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக பொது விநியோக கடை கட்டப்பட்டது.
இந்தப் புதிய கட்டடத்தை பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார். அப்போது, பொதுமக்களுக்கு இலவசமாக அரிசிகளை வழங்கினார்.