தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட பெண் சடலமாக மீட்பு - காவல்துறை விசாரணை! - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டிருந்த பெண், கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

missing-womans-body-recovered-police-investigation
missing-womans-body-recovered-police-investigation

By

Published : Aug 26, 2020, 11:00 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வாணிமல்லி கிராமத்தில் திருமணத்தை மீறிய உறவில் காட்வின் என்பவருடன் தங்கியிருந்த செகந்தராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா (38) என்ற பெண் 2 மாதங்களுக்கு முன் மாயமானதாக அவரது சகோதரர் விக்ரம் செகந்திராபாத்திலிருந்து, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாரளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பாதிரிவேடு காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் மெல்வின் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரியங்கா கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பிரியங்காவின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், இக்கொலை தொடர்பாக தலைமறைவான மெல்வினின் நண்பர்கள் விஜய் ஆனந்த், கேரளாவைச் சேர்ந்த நாயர் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், அருகாமையில் உள்ள கிணற்றில் மூன்று பைகள் மிதப்பதை அங்கு குளித்த சிறுவர்கள் கண்டனர். இது குறித்தும் காவலர்கள் விசாரணையில் இறங்கினர்.

அப்போது, அந்த மூன்று பைகளில் இருந்த 11 பாக்கெட்டுகளில் ஹெராயின் பவுடர் இருப்பது தெரியவந்தது.

காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட பெண் சடலமாக மீட்பு

இதனை கைப்பற்றி காவலர்கள், கிணற்றில் கிடந்த பொருளுக்கும், கொலையாளிகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:உ.பி.யில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்!

ABOUT THE AUTHOR

...view details