தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினருக்குப் பாதிப்பில்லை' - சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்

திருவள்ளூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் சிறுபான்மையினருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Minority Advice Meeting - John Mahendran Participation!
Minority Advice Meeting - John Mahendran Participation!

By

Published : Feb 13, 2020, 11:10 AM IST

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜான் மகேந்திரன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் சிறுபான்மையினர் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஜான் மகேந்திரன், ”திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக 2018-2019ஆம் ஆண்டில் 14 குழுக்களுக்குக் கடனாக 7 லட்சம் ரூபாயும் 54 நபர்களுக்குத் தனிநபர் கடனாக 27 லட்சம் ரூபாயாகவும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தனிநபர் கடன், குழு கடன் உட்பட 110 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கான ஆலோசனை பொதுக்கூட்டம்

தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துவர்கள் மகளிர் சங்கம் தொடங்கப்பட்டு, தற்போது 10 கிறிஸ்தவ ஆதரவற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும், அரசின் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களும் முழுமையாக சிறுபான்மையினருக்குச் சென்றடைந்து அனைவரும் பயன்பெற வேண்டும்” என்றார்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் சிறுபான்மையினருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் இதனால் அவருடைய வாழ்வாதாரம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருநல்லூர் ஜல்லிக்கட்டு - காளைகள் முட்டி 66 பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details