திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள பள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (25). இவருடைய நண்பர்கள் சீமாவரம் பகுதியைச் சேர்ந்த சந்துரு (25), மாரி (29). இவர்கள் மூவரும் நேற்று மாலையில் ஒரே இருசக்கர வாகனத்தில் செங்குன்றம் பகுதிக்குச் சென்றுவிட்டு மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.